19 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாவத்தகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல்(Kurunakal) - மாவத்தகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட யுவதி நேற்று (13) பிற்பகல் குருணாகல் - மாவத்தகம பிரதேசத்தில் உள்ள மேலதிக வகுப்பு நிலையமொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, இந்த மேலதிக வகுப்பு நிலையத்தில் இருந்த சிசிரிவி கமராக்களை கண்காணித்துக் கொண்டிருந்த நபர்கள் சிலர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த பகுதியை அவதானித்துள்ளனர்.
பொலிஸாருக்கு தகவல்
இந் நிலையில் அதனைச் சோதனையிடச் சென்றப் போது யுவதி சந்தேக நபரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதை கண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைத்த நபர்கள் யுவதியைச் சந்தேக நபரிடமிருந்து காப்பாற்றி இது தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரான மேலதிக வகுப்பு ஆசிரியரைக் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்த பொலிஸார் மேலதிக் அவிசாரணைகளி முன்னெடுத்துள்ளனர்.
(Srilanka Tamil News......)



