சமூக ஊடகங்களின் வழியாக இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை!

 

tamil lk news

சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களை வெளியிட்டு பயனாளிகளின் வங்கி விபரங்களை திருடி பணமோசடி செய்வது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக  இலங்கை(srilanka) கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT) தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் இதுவரை 03 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோபொல தெரிவித்துள்ளார்.


பயனர்கள் சில விளம்பரங்களைக் கிளிக் செய்யும் போது, அவர்கள் வேறொரு தகவலுக்குத் திருப்பிவிடப்பட்டு, இந்த வங்கி விபரத்திருட்டு மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


புதிய செயலி ஒன்றை பதிவிறக்கக்கூறி, விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களின் தொடர்புடைய கொள்வனவை மையப்படுத்தி இந்த மோசடி இடம்பெறுகிறது.

(Srilanka Tamil News.......)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்