வவுனியாவில் நூதன முறையில் ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் கொள்ளை....! Vavuniya News

tamil lk news


 வவுனியாவில் (Vavuniya) பெண்ணொருவரின் ஏ.ரி.எம் பண அட்டையிலிருந்த 37ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) இடம்பெற்றுள்ளது.


வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு பெண் ஒருவர் சென்றபோது அப்பணத்தை பெற நபரொருவர் உதவி புரிவதுபோல நடித்து அட்டையை இயந்திரத்தினுள் சிக்கவைத்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து வங்கி பாதுகாப்பு அலுவலகரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.


இதனையடுத்து பாதுகாப்பு அலுவலகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய, வங்கியிலிருந்து 37ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


இந்நிலையில், திருட்டுச்சம்பவம் தொடர்பில் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவின் உதவியுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Vavuniya tamil News......)


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்