யாழ்ப்பாணம் (Jaffna)- மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி - புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது.
அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.
துயரச்சம்பவம்
சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த வயது 22 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
- வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் வவுனியாவில் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
- வைத்தியசாலையில் மாயமான குழந்தை..! உறவினர்கள் கொந்தளிப்பு
- தென் பசுபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
குறித்த இளைஞர் நாளைய தினம் கனடாவுக்கு பயணமாகயிருந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Jaffna Tamil News.......)



