4 வயது மகனைத் தாக்கி சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் தாயும் தாயின் காதலனும் கைது செய்யப்பட்டதாக வெலிகமை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய தாயும் 40 வயதுடைய தாயின் காதலனும் 4 வயது மகனைத் தாக்கி கயிற்றினால் கட்டி சித்தராவதைச் செய்வதாக 6 ஆம் திகதி இரவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சித்திரவதைக்குள்ளான மகன் வெலிகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சித்திரவதைக்குள்ளான மகன் மின்சார கம்பிகளைச் சேதப்படுத்தியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தாயையும் தாயின் காதலனையும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
srilanka



