செம்மணி மனித புதைகுழி: புதிதாக 6 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்!!

 

tamil lk News

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள மனித புதைகுழிகளில், இன்று (05) நடைபெற்ற அகழ்வு பணிகளில் புதிதாக 6 எலும்புக்கூட தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 4 எலும்புக்கூட தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த 16 நாட்களில் மொத்தம் 65 எலும்புக்கூட தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


 


நீதிமன்றத்தால் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல-01" மற்றும் "இல-02" என அடையாளப்படுத்தப்பட்ட இரு புதைகுழிகளில், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 31வது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இதுவரை 40 நாட்கள் கட்டமாக அகழ்வு பணிகள் நடைபெற்று, மொத்தம் 130 எலும்புக்கூட தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, 141 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


 


அதேவேளை, செம்மணியில் தற்போதுள்ள புதைகுழிகளுக்கு அருகில் மேலும் புதைகுழிகள் உள்ளனவா என ஆராய, ஜி.பி.ஆர். ஸ்கானர் மூலம் ஸ்கான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


 


இப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன, மேலும் இவை சர்வதேச மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்