ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மூன்று இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சுற்றுலாவிற்காக தனது காதலனுடன் இலங்கைக்கு வந்திருந்த இளம் பெண், கற்பிட்டியின் கண்டகுளி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி இரவு வேறொரு ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் குறித்த பெண் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர்கள் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகவும், அவர் எதிர்த்தபோது அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் கற்பிட்டி பொலிஸாருக்கு நேற்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கற்பிட்டி, கண்டகுளிய பகுதியை சேர்ந்த 23 மற்றும் 39 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.