பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக 10 ரயில் சேவைகள் இன்று(08) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என்.ஜே. இடிபோலேஜ் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணங்கள் ரத்து
நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து நேற்று 80க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
பதவி உயர்வு வழங்கப்படாமை, ஆட்சேர்ப்பில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Srilanka Tamil News
Tags:
srilanka



