குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (10.06.2024) இடம்பெற்றுள்ளது.
விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவியாக இருந்த 15 வயதுடைய சிறுமியை காதலித்து வீட்டை விட்டு கூட்டிச்சென்ற சுதந்திரபுரத்தினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையிலேயே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்த சிறுமியை யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி,கிளிநொச்சி போன்ற பகுதிகளில் உறவினர்களின் வீடுகளில் தங்கி நின்று பின் தனது இடமான வெள்ளப்பள்ளத்திற்கு சிறுமியினை வீட்டிற்கு கூட்டிவந்துள்ளார். சிறுமி நான்குமாத கர்ப்பம் தரித்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் புதுக்குடியிருப்பு பொலிஸார் 24 வயதுயுடைய கணவனை கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில், சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுமியின் கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mullaitivu Tamil News



