யாழ்ப்பாண நகரை மையமாக பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்று(21.10.2025) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் குறித்த சேவை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில் சம்பிரதாய பூர்வமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவையை பெற்றுக்கொள்ள 021- 222 2221 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து பொதுமக்கள் முறையிடுவதன் மூலம் பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து வந்து பிரச்சினைகளை தீர்ப்பர் என பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியில் இருந்தும் குறித்த இலக்கத்திற்கு அழைப்பெடுத்து முறையிட்டால் அந்தந்த பகுதி பொலிஸ் நிலையங்கள் ஊடாக பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துக்களின் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக உடனடி தீர்வை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.