மீண்டும் அதிகரிக்கும் கொடிய நோய்...! இலங்கையில் அபாய வலயமாக 23 பிரதேசங்கள்!

tamil lk news


 நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், மாகாணம், மாவட்ட ரீதியாக டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விபரத்தை தேசிய டெங்கு நோய் தடுப்புப்பிரிவு வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 31,480 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதேவேளை, மேல் மாகாணத்தில் 39.5 சதவீதமானோரும், வடக்கில் 14.5 சதவீதமானோரும், மத்திய மாகாணத்தில் 9.7 சதவீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 6.9 சதவீதமானோரும், கிழக்கு மாகாணத்தில் 7.3 சதவீதமானோரும், சப்ரகமுவ மாகாணத்தில் 10.3 சதவீதமானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மாவட்டங்களின் அடிப்படையில், கொழும்பில் 23.5 சதவீதமானோரும், கம்பஹாவில் 10.5 சதவீதமானோரும் களுத்துறையில் 5.5 சதவீதமானோரும், யாழில் 12.7 சதவீதமானோரும், கண்டியில் 8.2 சதவீதமானோரும், குருநாகலில் 4.3 சதவீதமானோரும், புத்தளத்தில் 2.6 சதவீதமானவர்களும், காலியில் 4.5 சதவீதமானவர்களும், கேகாலையில் 4.1 சதவீதமானவர்களும், இரத்தினப்புரியில் 6.2 சதவீதமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

tamil lk news


இதுவரை காலப்பகுதியில் டெங்கு நோய் அபாய வலயமாக 23 பிரதேசங்கள் இனங்கானப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்