ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 0-30 யூனிட் ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும்,
30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும்,
60-90 அலகுகள் 30லிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.
120 வரையான அலகுக்கு 50 முதல் 30 ரூபா வரையும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
(Srilanka Tamil News.....)



