யாழிலிருந்து சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து...!

கண்டி ( Kandy) - யாழ்ப்பாணம் (Jaffna) வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (20) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று,

tamil lk news



வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பௌசர் ஒன்றின் பின்புறத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தின் போது லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணை


லொறியின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.




இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Srilanka Tamil News
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்