இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்..!


tamil lk news


இலங்கையில் (Srilanka) சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.


தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பதில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினசரி  கைது

இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து பொலிஸாரால் கிட்டத்தட்ட 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாதாந்தம் கிட்டத்தட்ட 300000 பேர் வரையில் கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.


அதற்கமைய, மதிப்பெண் முறை அறிமுகப்படுத்திய பின்னர் இவ்வாறு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாரதிகளின் புள்ளிகள் குறைக்கப்படும்.


சாரதி அனுமதி பத்திரத்தில் மொத்தமான 24 புள்ளிகள் சாரதி அனுமதி பத்திரத்தில் வழங்கப்படும். ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றால் 10 புள்ளிகள் குறைக்கப்படும்.


சாரதி அனுமதி பத்திரம் இரத்து

குடி போதையில் வாகனம் ஓட்டினால் 6 புள்ளிகள் குறைக்கப்படும். 24 புள்ளிகள் குறைக்கப்பட்டால் 2 வருடங்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்.


2 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பரீட்சை எழுதி சாரதி அனுமதி பத்திரம் பெறும் பாடசாலைக்கு சென்று அனுமதி பத்திரம் பெற வேண்டும்.




விதிகளை மீறும் சாரதிகளுக்கு பயிற்சியளித்த தரப்பினர் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்துள்ளார்.

Srilanka Tamil News-tamil lk news
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்