சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இலங்கை (Srilanka) பெண் ஒருவர் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டின் உரிமையாளரினால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால், தன்னை விரைவில் இலங்கைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியா
ஹொரவ்பொத்தானை - வில்லேவாவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இந்த பெண்ணே இவ்வாறு சித்தரவதைக்கு உள்ளாகழயுள்ளார்.
இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.
தனது சேவைக் காலம் முடிவதற்குள் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் பணி புரியும் வீட்டின் உரிமையாளர்கள் தம்மை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
Srilanka Tamil News
Tags:
srilanka