Jaffna News
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் இன்றைய தினம் (18) பிற்பகல் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தயபோது மண்ணில் புதைந்திருந்த நிலையில் எறிகணை ஒன்றை கண்டுள்ளனர்.

வவுனியாவில் பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி! Vavuniya News
இந்நிலையில் உடனடியாக கட்டுமான வேலைகளை நிறுத்திவிட்டு சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிற்பகல் 5:00 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டுள்ளனர்.
இது யுத்த காலத்தில் ஏவப்பட்ட எறிகளையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.