திருகோணமலை,(Trincomalee) மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 15 பேரை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
இதில் 11ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 ஆண்கள் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைதியின்மை சம்பவத்தில் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .
Trincomalee Tamil News
Tags:
trincomalee