அவதானத்துடன் செயற்படுமாறு வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை! மீண்டும் திறக்கப்பட்டுள்ளது கொழும்பு-கண்டி வீதி

 கொழும்பு (Colombo) - கண்டி(Kandy) பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.


கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்று (08) இரவு 7.30 மணி முதல் இன்று (09)  இன்று காலை 6.45  மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.


tamil lk news


ஆபத்தான மரங்கள்


மழையுடனான வானிலையுடன் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான மரங்கள்,  பாறை பாகங்களை அகற்றுவதற்காக நேற்று குறித்த வீதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Srilanka Tamil News

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்