இலங்கையில் சதம் அடித்த 16 வயது இளம் இங்கிலாந்து வீரர்....!

 

tamil lk news

இங்கிலாந்து (England) கிரிக்கெட் அணியின் முன்னாள் அனைத்துத்துறை ஆட்டவீரர் அண்ட்ரூ பிளினடாப்பின் 16 வயது மகன் ராக்கி பிளின்டொஃப், இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்காக சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


 அவர், நான்கு நாள் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டத்தை நேற்று (18.07.2024) 82 ஓட்டங்களில் தொடங்கிய நிலையில் 181 பந்துகளில் 106 ஓட்டங்களை பெற்றார்.


இதில் ஒன்பது நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்கியிருந்தன.




இந்த நிலையில், இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்ட அணி, மொத்தம் 477 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. 


மேலும், ஃப்ரெடி என்ற புனைப்பெயர் கொண்ட அண்ட்ரூ பிளின்டாஃப், 1998 மற்றும் 2009இற்கு இடையில் இங்கிலாந்துக்காக 79 டெஸ்ட் போட்டிகள் 141 ஒரு நாள் மற்றும் ஏழு 20க்கு20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்