1700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி மலையகத்தில் போராட்டம் முன்னெடுப்பு...!

 

tamil lk news

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த போராட்டமானது இன்று (15) காலை பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிபடத்தில் ஆரம்பமாகி பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது.


இதன்போது பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரையின் உருவப்படம் எரிக்கப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தால் பொகவந்தலாவ ஹட்டன் வீதி ஊடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.



சுமார் மூன்று மணிநேரம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பொகவந்தலாவ நகர வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.


Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்