முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தரசா ஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
20 லட்சம் பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு நேற்று (29) பிற்பகல் சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளதாகவும் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை என்றும் அறியமுடிகின்றது.
குறித்த இளைஞரின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவரது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கிள் இனங்காணப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தேடியதை தொடர்ந்து வவுனிக்குளத்தின் மூன்றாவது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) உடலம் இனங்காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன்குளம் பொலிஸார், நீதிபதி முன்னிலையில் உடலத்தை மீட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Srilanka Tamil News (Mullaitivu)