அனுராதபுரம் ,திருகோணமலை(Trincomalee) வீதியில் அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ஹொரோவ்பதான யாங்கோயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் சொகுசு காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தானது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் ஹொரோவ்பதான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Srilanka Tamil News


