கதிர்காமம் எசல பெரஹெரவில் யானையால் ஏற்பட்ட அசம்பாவிதம்... 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

tamil lk news


 இலங்கையில் (Srilanka)  வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் நேற்றையதினம் (06-07-2024) எசல பெரஹரா உற்சவத்தின் முதல் நாள் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


எசல பெரஹரா உற்சவத்தில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழப்பியதால் ஏற்பட்ட பதற்றத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்