சொகுசு காரை மோதித்தள்ளிய கெப் வண்டி - அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

 சொகுசு காரொன்றுடன் கெப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.


புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் நீர் வழங்கள் அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக நேற்று மாலை சொகுசு காருடன் கெப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

tamil lk news


அனுராதாபுர பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு காருடன் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் வாகனம் கட்டுப்பாட்டை இலந்து காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது கார் தலைகீழாக புரண்டு முற்றாக சேதமாகியுள்ளதுடன் காரில் பயனித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.




கெப் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பினையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.


Srilanka Tamil News

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்