காலி - கொழும்பு வீதியில் விபத்து: 22 வயதுடைய இளைஞர் பலி



tamil lk news

மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


காலி - கொழும்பு வீதியில் இன்று (19) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.


காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இந்த விபத்தில் படுகாயமடைந்த  மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.



இந்த விபத்தில் படுகாயமடைந்த  மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.


Srilanka Tamil News




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்