கிளிநொச்சியில் அரச,தனியார் பேருந்துகளின் செயற்பாட்டால் பயணிகள் பாதிப்பு

tamil lk news

 

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


இன்று பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி (kilinochchi)  மாவட்ட செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.


பயணிகளை ஏற்றுவதற்கு முண்டியடித்த பேருந்துகள் வவுனியா(Vavuniya) நோக்கி பயணித்த நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது.



இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.



தொடரும் இம் முரண்பாட்டை தீர்த்து பயணிகள் பாதுகாப்பாக பொது போக்குவரத்தினை பயன்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்