காலி சிறைச்சாலையில் கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு....!

 

tamil lk news

காலி (Galle) சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த தகவலை சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க (Hemantha Ranasinghe) தெரிவித்துள்ளார்.


குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் (Karapitiya Teaching Hospital) சிகிச்சை பெற்று வந்துள்ளார்.




இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (13) அவர்  உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.




இதேவேளை, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்