மின் கட்டணம் செலுத்துவோருக்கு மகிழ்ச்சித் தகவல்...!

tamil lk news
 

மின் கட்டண மறுசீரமைப்புக்கு அமைய 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு நன்மை கிட்டியுள்ளதாக, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதற்கமைய 18 இலட்சத்து 43 ஆயிரத்து 762 மின் நுகர்வோர்கள் அதிகபட்சமாக 280 ரூபாய் மட்டுமே மின்சார கட்டணமாக செலுத்த வேண்டும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.



இது மொத்த உள்நாட்டு மின் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் 39 சதவீதமாகும்.



மேலும், 17 இலட்சத்து 27 ஆயிரத்து 828 நுகர்வோர் மாதாந்த அதிகபட்ச மின்சாரக் கட்டணமாக 700 ரூபாவை மட்டுமே செலுத்த வேண்டியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இந்த வருடத்திற்காக இரண்டாம் கட்ட மின் கட்டண மறுசீரமைப்பு கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது.




இதன்போது நாட்டு மக்களின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்