ஏ.ஐ (Artificial Intelligence – AI) மாடல்களுக்கு இடையில் இடம்பெற்ற உலக அளவிலான அழகி போட்டியில் மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி (Kenza Layli) என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் ஏ.ஐ (AI) பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் (Artificial Intelligence – AI) பெண் போல உருவாக்கப்பட்ட ஏ.ஐ மாடல்களுக்கு இடையில் உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மிரியம் பெஸ்ஸா என்ற தொழில்நுட்ப வல்லுநரால் உருவாக்கப்பட்ட ஏ.ஐ மாடல் மிஸ் - ஏ.ஐ பட்டத்தை பெற்றுள்ளது.
இந்த ஏ.ஐ மாடல், ஹிஜாப் அணியும் ஒரு வாழ்க்கை முறையை கொண்டவராக சமூக ஊடகங்களில் இயங்கி வருகின்றது.
அதேவேளை, குறித்த உலக அளவிலான மிஸ் - ஏ.ஐபோட்டியானது அழகு, தொழில்நுட்பத்திறன் மற்றும் சமூக ஊடகங்களில் செயற்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.




