தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள பெறமுடியாமையினால் மனமுடைந்த குடும்ப பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம்,(Jaffna) அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உறவு முறையான இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது.
அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்த போது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்று, தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார்.
பண உதவியை பெற்றுக்கொண்ட பெண், பணத்தினை மீள செலுத்தாத நிலையில், வங்கியில் கடன் பெற்ற பெண் பண நெருக்கடிக்குள்ளாகி, மனவுளைச்சலில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நண்பியின் பெயரை முகநூலில் பதிவிட்டு, தனது மரணத்திற்கு காரணம் இவர் தான் என்றும் இவரால் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அநாதையாக விட்டு செல்வதாகவும் பதிவிட்டு குறித்த பெண் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நண்பிக்கு உதவியதால் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Jaffna Tamil News


