யுவதி ஒருவரை குளிக்கும் போது காணொளி எடுக்க முயன்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்...! (Video)

 

tamil lk news

வவுனியாவில் தனியார் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இளம் யுவதி ஒருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைத்தொலைபேசியில் காணொளி எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி பேசும் குறித்த யுவதி வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சில யுவதிகளுடன் இணைந்து தங்கியுள்ளார்.


இந்த வீட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் (vavuniya University) ஆங்கிலப் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றும் ஒருவர் குழு வகுப்புக்களை நடத்தி வருகின்றார்.


இந்நிலையில், வீட்டில் அவர் வெளியில் கற்பித்துக் கொண்டிருந்த போது யுவதி ஒருவர் குளியலறைக்குள் சென்று குளித்து கொண்டிருந்துள்ளார்.




இதன்போது குளியலறைப் பக்கம் சென்ற விரிவுரையாளர் குளியறையின் மேல் துவாரத்தின் ஊடாக கைத்தொலைபேசியை உயர்த்தி காணொளி எடுக்க முயன்றுள்ளதுடன், அதன் பின் குளியலறையின் மறுபக்கம் தவழ்ந்து சென்றுள்ளார்.




இந்நிலையில், யுவதி சத்தம் கேட்டு வெளியில் இருந்த சக யுவதிகளை அழைத்த போது குறித்த விரிவுரையாளர் குனிந்து ஓடியபடி வெளியேறியுள்ளார்.




அதேவேளை, சம்பவம் தொடர்பான காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.

Vavuniya Tamil News





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்