வெளிநாட்டு கனவுடன் ஆட்டோவில் பயணித்த இளைஞன்- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயரம்

 வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


புத்தளத்தில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று முந்தலம் வைத்தியசாலைக்கு முன்பாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

tamil lk news


வெளிநாட்டு வேலைக்காக செல்வதற்காக  கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்ற நபரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே, பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.


குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



படுகாயமடைந்தவர்கள் முந்தலம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹலவத்த பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Srilanka Tamil News



Previous Post Next Post