எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தனது ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் (06.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தனது இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
|
மேலும், சஜித் பிரேமதாச ஜனாதிபத் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, நுவன் போப்பகே, கீர்த்திரத்ன உட்பட்ட பலர் போட்டியிடவுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Srilanka Tamil News