மர்மமான முறையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை! யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்

tamil lk news


 யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியில் பிறந்து 45 நாளான குழந்தை ஒன்று சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளது.


இதனையடுத்து குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.


குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில், மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.



மேலும், குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக இன்று நடைபெறும் உடல் கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.


Jaffna Tamil News





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்