மட்டக்களப்பு(batticaloa) - கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் ஓரமாக கிடந்த கிளைமோர் ரக வெடிபொருளை சந்திவெளி பொலிசார் இன்று காலை (8) மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மர்மப் வெடிபொருளொன்று வீதியின் ஓரத்திலுள்ள புற்தரையில் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சந்திவெளி பொலிசார் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த வெடிப்பொருளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக குண்டு செயலிழக்கும் இராணுவப் பிரிவினரின் உதவியை நாடியுள்ளதாகவும்,
இது கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கைவிடப்பட்டதாக இருக்கலாம் என மேலும் பொலிசார் தெரிவித்தனர்.
Srilanka Tamil News