களமிறங்க தயாராகும் முன்னணி கிரிக்கெட் தொடரொன்றில்-தினேஷ் கார்த்திக்

 

tamil lk news

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்க சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.


இதன் மூலம் குறித்த  தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார்..


இவர் இந்த தொடரின் பார்ல் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி தென் ஆப்பிரிக்க சுப்பர் லீக் தொடர் ஆரம்பமாகவுள்ளது.


கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் அதன்பிறகு முதல் முறையாக இந்த தொடரில் விளையாடவுள்ளார்.



இந்திய அணிக்காக 180 போட்டிகளில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், கடைசியாக ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.


அதன்பிறகு இவர் பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்