எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றமா..? வெளியான தகவல்

 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை  இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


 இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை திருத்தம் மேற்கொண்டு வருகின்றன.

tamil lk news


இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அரச உயர் அதிகாரி ஒருவர் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை செப்டம்பர் வரை மாறாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.


விலை நிர்ணய சூத்திரத்திற்கு ஏற்ப எந்தவொரு விலை திருத்தமும் தேர்தல் பிரச்சாரத்தில் சாதகமான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  அரசாங்க வட்டார தகவல் தெரிவித்துள்ளது.


இதேவேளை இலங்கையில் தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SrilankaTamil News


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்