ராஜபக்ச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு

 

tamil lk news

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ சில தினங்களில் அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் காரணமாக பசில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.


ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நிறுத்தும் தீர்மானித்தினால் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தம்மிக்க பெரேரா ஏற்க மறுத்துள்ளார்.


இந்த நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரும் அதனை நிராகரித்ததையடுத்து, நாமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்தார்.


இது தொடர்பில் பல்வேறு மட்ட கலந்துரையாடலில் ரணில் - பசில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்