சனியின் பெயர்ச்சியால் வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள்....!

 

tamil lk news

நம்மில் ஒருவரின் ராசியில் சனி சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த ராசிக்கு அரசனைப் போல வாழ்க்கை கிடைக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. சனி நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன் தயாராக கூடியவராவார்.

சனி பகவான் கூடிய விரைவில் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார்.


தற்போது குருவின் அதிபதி நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணித்து வரும் சனி பகவான் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் திகதி, 2024 அன்று, அதாவது இன்னும் ஒன்பது நாட்களில் வக்ர நிலையில் நகர்ந்து பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் பெயர்ச்சி அடைவார்.


இதன் பின்னர் சனியின் அடுத்த நட்சத்திர மாற்றம் அக்டோபர் மாதம் சதயம் நட்சத்திரத்தில் நிகழும். தற்போது குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நாம் இங்கு பார்போம்.



கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். சட்ட விஷயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும், தொடர்ந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். பழைய முதலீடு மூலம் கட்டாயம் நிதி நிலை மேம்படும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும்.



விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி நன்மை பயக்கும். பல ஆண்டுகளாக தடைப்பட்டு வந்த பணிகள் இப்போது வேகவேகமாக நிறைவு பெறும். செல்வம் பெருகும், வங்கி இருப்பு அதிக்கலாம். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வணிகர்களுக்கு இந்த சனியின் நட்சத்திர பெயர்ச்சி காலம் மிகவும் சாதகமாக இருக்கும். மூதலீடு செய்வதன் மூலம் லாபம் ஈட்டலாம்.



கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சனியின் அருளால் பதவி உயர்வையும், நற்பெயரையும் பெறுவீர்கள். தொழிலின் மூலம் நிதி ஆதாயம் அடைவீர்கள். பணப் பிரச்சனை தீர்வுக்கு வரும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். சொத்து, செல்வம் பெருக வாய்ப்புகள் இருக்கும்.



Previous Post Next Post