துடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் ஐசிசி தெரிவு செய்து அவர்களை அந்தந்த மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாக அறிவிக்கும்.
அதன்படி ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக இலங்கை அணியின் சமாரி அத்தப்பத்து (Chamari Athapaththu) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சமாரி அத்தப்பத்து சிறப்பாக விளையாடியதோடு இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இதனால் சமாரி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமாரி அத்தப்பத்து பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் 304 ரன்கள் குவித்ததுடன் இவரது சராசரி 101.33 ஆகும்.
மேலும், ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இங்கிலாந்து தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.