வவுனியாவில் பாரவூர்தி மோதி ஒருவர் பலி (Vavuniya News)

 

tamil lk news

வவுனியா(Vavuniya) - மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(19.08.2024) இடம்பெற்றுள்ளது.


இதன்போது, மதவாச்சி பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியில் சென்ற ஒருவர் மீது மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



அத்துடன், விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் அவர் தொடர்பிலான அடையாளங்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



மேலும், விபத்தின் போது பாரவூர்தியின் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர் மிஹிந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Vavuniya Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்