கொழும்பில் தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை...! விசாரணை தீவிரம்

 

tamil lk news

கொழும்பு(Colombo) ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


சம்பவத்தில், கொடகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் உயிரிழந்த ஆசிரியை சம்பவத்தன்று தனது பிள்ளையை தனது கணவருடன் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு உயிர்மாய்த்தாக கூறப்படுகின்றது.


வர்த்தகரான தந்தை திடீரென வீட்டுக்கு வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.


இந்நிலையில் ஆசிரியரின் விபரீத முடிவிற்கான காரணமான தகவல்கள் எதுவும் வெளியாகாததால், முழுமையான பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் சகல விடயங்களையும் பரிசீலித்து ஆசியையின் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பை வழங்குமாறு தென் கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் பரிந்த கொட்டுகொட உத்தரவிட்டுள்ளார்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்