உலக டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி மேலும் முன்னேறி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
சொந்த மண்ணில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையிலேயே இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.
புள்ளிப்பட்டியலின் படி, இந்தியா 10 போட்டிகளில் பங்கேற்று 86 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா 12 போட்டிகளில் 90 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கை 9 போட்டிகளில் 60 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.