விடுதியொன்றில் சிக்கிய காதல் ஜோடி: விசாரணையில் வெளியான தகவல்!

 

tamil lk news

பெலும்மஹர - வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் இன்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அம்பகஸ்பிட்டிய, கந்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவரும் அவிசாவளை மீகஹா கொடல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




சந்தேகநபர் ஹிரியால பொலிஸாரினால் இதற்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடம் இருந்து 26 கிராம் 250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மற்றவரிடம் இருந்து 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்