வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதாரண தரப் பரீட்சையில் மாணவிகள் சாதனை

 

tamil lk news

2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.


அந்த வகையில், வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 25 பேர் இம்முறை சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


குறித்த மாணவிகள் தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.




பாடசாலையின் பெறுபேறுகளில் மாணவர்கள் தொடர்ச்சியாக உயர்வை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போதும் அதிகளமான மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தியை பெற்றுள்ளனர்.




மேலும், 16 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தியையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்