காட்டுமிராண்டித்தனமாக மாணவனைத் தாக்கிய ஆசிரியர் கைது! (Jaffna News)

யாழ். இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். 


குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

tamil lk news


இரு  மாணவர்களுக்கிடையில்  புத்தகப் பை தொடர்பில் இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த ஆசிரியர் தாறுமாகத் தடியாலும் கைகளாலும் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.




குறித்த ஆசிரியர் புத்தூர் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் விஞ்ஞான பாடம் கற்பிப்பவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரியவந்துள்ளது.


இதையடுத்து கோப்பாய் பொலிசார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர். 



இருப்பினும் அந்த ஆசிரியரை நீதிமன்றத்திற்கு செல்லவிடாது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது.


குறித்த ஆசிரியரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்