ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது திணைக்களத்திற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Srilanka Tamil News