வவுனியா எரிபொருள் நிலையத்தில் ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

tamil lk news


 வவுனியா, பண்டார வன்னியன் சதுக்கப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த தாக்குதல் சம்பவம் இன்றையதினம் (02.09.2024) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திடீரென அவர்களில் ஒருவர் அங்கு கடமையில் இருந்த மற்றுமொரு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்கியுள்ளார்.


இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதனையடுத்து, அங்கு முச்சக்கர வண்டியில் பொலிஸார் வருகை தந்த போது, தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதன்போது, போக்குவரத்து பொலிஸார் இருவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்ற போது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Vavuniya Tamik News



Previous Post Next Post