எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்!

 

tamil lk news

இலங்கை (Srilanka) பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து கட்டளைகளையும் வழங்கியுள்ளது. எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. கருணாரத்ன தெரிவித்துள்ளார். 


ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போதுமான எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் வாரந்தோறும் திட்டமிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.


எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான தீர்மானங்கள் வெளிப்படைத் தன்மையுடன் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




மேலும், மற்ற தரப்பினரால் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலையை குறைக்க முடியாது, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திற்குள் பெரிய அளவிலான எரிபொருள் சலுகைகளை வழங்குவது சாத்தியமில்லை. எனவே, தற்போதுள்ள சூத்திரம் மற்றும் சட்டத்தின்படி அண்மைய எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.




அதேவேளை, ஒரேயடியாக பாரிய சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை எனவும், இதன் காரணமாக, வரிசைகள் உருவாகும் நிலை ஏற்படும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்