திருகோணமலை (Trincomalee) - கிண்ணியாவை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாக கொண்ட 'Worldwide Book of Records' நிறுவனத்தினால் இவர் உலக சாதனையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பத்தின் 100ஆம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் 2 நிமிடம் 12 செக்கன்களில் கூறி இச்சாதனையை நஸ்மி நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், சாதனையை நிகழ்த்திய சிறுவனுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



